நெகேமியா
ஆசிரியர்
நெகேமியா (யெகோவா ஆறுதளிக்கிறார்) இந்த புத்தகத்தின் முக்கிய ஆசிரியர் என்று யூத பாரம்பரியம் ஆணித்தரமாக சொல்கிறது. அதிகமான பகுதிகள் அவனாலே எழுதப்பட்டது. அவனுடைய வாலிப நாட்களைக் குறித்து ஒரு குறிப்பும் இல்லை. பெர்சியா சாம்ராஜ்ஜியத்தில் அர்தசஷ்டா இராஜாவின் பானபாத்திரக்காரனாக அறிமுகப்படுத்தப்படுகிறான். எஸ்றா புத்தகத்துக்கு அடுத்து நெகேமியா வரிசையில் வருகிறது. இவை இரண்டும் ஒரே புத்தகமாக இருந்தது என்று வேத வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 457 க்கும் 400 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இந்த புத்தகம், பாபிலோனியா தேசத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, யூத தேசத்தில் உள்ள எருசலேமில் பெர்சியர் காலத்தில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்களுக்கு எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தெரிந்துக் கொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனின் அன்பையும் வல்லமையும் அறிந்து அவருடைய உடன்படிக்கையைக்கு உண்மையைய் இருக்க அறிவுறுத்துகிறார். தேவன் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். அவருடைய கட்டளைக்களுக்கு கீழ்படிய வேண்டிய எல்லாக் காரியங்களையும் தேவன் தருகிறார். ஜனங்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்து தேவனின் காரியங்களை சேர்ந்து செய்யவேண்டும். தேவனை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் சுயநலம் காணப்படக்கூடாது. பணக்காரர்கள் ஏழ்மையின் நிமித்தம் ஜனங்களை ஏமாற்றக்கூடாது.
தெரிந்துக் கொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனின் அன்பையும் வல்லமையும் அறிந்து அவருடைய உடன்படிக்கையைக்கு உண்மையைய் இருக்க அறிவுறுத்துகிறார். தேவன் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். அவருடைய கட்டளைக்களுக்கு கீழ்படிய வேண்டிய எல்லாக் காரியங்களையும் தேவன் தருகிறார். ஜனங்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்து தேவனின் காரியங்களை சேர்ந்து செய்யவேண்டும். தேவனை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் சுயநலம் காணப்படக்கூடாது. பணக்காரர்கள் ஏழ்மையின் நிமித்தம் ஜனங்களை ஏமாற்றக்கூடாது.
மையக் கருத்து
மறுபடி கட்டுதல்
பொருளடக்கம்
1 நெகேமியாவின் முதல் அதிபதியின் காலம் — 1:1-12:47
2 நெகேமியாவின் இரண்டாம் அதிபதியின் காலம் — 13:1-31
அத்தியாயம் 1
நெகேமியாவின் ஜெபம்
அகலியாவின் மகனாகிய நெகேமியாவின் செயல்பாடுகள்: இருபதாம் வருடம் கிஸ்லேயு* மாதத்தில் நான் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், என்னுடைய சகோதரர்களில் ஒருவனாகிய அனானியும், வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பிலிருந்து தப்பின யூதர்களின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீதியாக இருக்கிறவர்கள் அந்த தேசத்திலே கொடிய தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் மதில் இடிக்கப்பட்டும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டும் கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாட்களாகத் துக்கப்பட்டு, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தா யெகோவாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாக நடந்தோம்; நீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாமற்போனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை தேசங்களுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே சிதறுண்டுபோனவர்கள் வானத்தின் கடைசி முனையில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என்னுடைய நாமம் விளங்குவதற்காக நான் தெரிந்துகொண்ட இடத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். 10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே. 11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.
* அத்தியாயம் 1:1 1:1 கிஸ்லேயு மாதம் பாபிலோனின் காலண்டரின் 9, மாதமாகும். எபிரேயர் காலண்டர் படி இது நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை ஆகும் அத்தியாயம் 1:1 1:1 பெர்சிய இராஜ்ஜியத்தின் அர்தசஷ்டா இராஜாவின் (கி. மு. 465-425) ஆட்சிக் காலத்தில் ஏலம் தேசத்தின் தலைநகரமான சூசன் அரண்மனையில் நெகேமியா இருந்தான்