சங்கீதம்– ௧௨௧
ஆரோகண பாடல்
௧ எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். ௨ வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். ௩ உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். ௪ இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. ௫ கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். ௬ பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை. ௭ கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். ௮ கர்த்தர் உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.