7
இசக்கார்
1 இசக்காரின் மகன்கள்:
தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் ஆகிய நால்வர்.
2 தோலாவின் மகன்கள்:
ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர்.
3 ஊசியின் மகன்:
இஸ்ரகியா.
இஸ்ரகியாவின் மகன்கள்:
மிகாயேல், ஒபதியா, யோயேல், இஷியா. இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாயிருந்தனர்.
4 இவர்களில் குடும்ப வம்சாவழியில் போருக்கு ஆயத்தமாக இருந்த மனிதர்கள் 36,000 பேர். இவர்களுக்கு அநேகம் மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
5 இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள்.
பென்யமீன்
6 பென்யமீனின் மகன்கள்:
பேலா, பெகேர், யெதியாயேல் என மூன்றுபேர் இருந்தனர்.
7 பேலாவின் மகன்கள்:
எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
8 பெகேரின் மகன்கள்:
செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலமேத். இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
9 வம்சாவழியின்படி குடும்பத்தலைவர்களும், 20,200 இராணுவ வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
10 யெதியாயேலின் மகன்:
பில்கான்.
பில்கானின் மகன்கள்:
எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிசாகார்.
11 யெதியாயேலின் ஆண் பிள்ளைகளான இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்கள். இவர்களில் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தமாயிருந்த வீரர்கள் 17,200 பேர்.
12 சுப்பீமியரும், உப்பீமியரும் ஈரின் வழித்தோன்றல்கள். ஊசிமியர் ஆகேரின் வழித்தோன்றல்கள்.
நப்தலி
13 நப்தலியின் மகன்கள்:
யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள்.
மனாசே
14 மனாசேயின் சந்ததிகள்:
அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.
15 மாகீர் உப்பீமியர், சுப்பீமியரின் சகோதரியாகிய மாக்காள் என்பவளை மணந்தான். மனாசேயின் இரண்டாம் மகன் செலொப்பியாத்; அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தனர்.
16 மாகீரின் மனைவி மாக்காள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள். அவனுடைய சகோதரன் சேரேஸ் என்று பெயரிடப்பட்டான். அவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம்.
17 ஊலாமின் மகன்:
பேதான்.
இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
18 அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள்.
19 செமிதாவின் மகன்கள்:
அகியான், செகெம், லிக்கி, அனியாம்.
எப்பிராயீம்
20 எப்பிராயீமின் சந்ததிகள்:
சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத்,
அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா,
அவனுடைய மகன் தாகாத்,
21 அவனுடைய மகன் சாபாத்,
அவனுடைய மகன் சுத்தெலாக்.
எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள்.
22 ஆகையால் இவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காக அநேக நாட்கள் துக்கங்கொண்டாடினான். அவனுடைய உறவினர்கள் வந்து அவனை ஆறுதல்படுத்தினர்.
23 பின்பு எப்பிராயீம் தனது மனைவியுடன் உறவுகொண்டதால், அவள் கருவுற்று அவனுக்கு வேறு ஒரு மகனைப் பெற்றாள். அந்தக் குடும்பத்தில் பெருந்துன்பம் ஏற்பட்டிருந்ததால் அவனுக்குப் பெரீயா என்று பெயரிட்டனர்.
24 எப்பிராயீமின் மகள் ஷேராள். இவள்மேல் பெத் ஓரோனின் கீழ்ப்புறத்தையும் மேற்புறத்தையும், ஊசேன்சேராவையும் கட்டினாள்.
25 பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப்,
அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான்,
26 அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத்,
அவனுடைய மகன் எலிஷாமா.
27 அவனுடைய மகன் நூன்,
அவனுடைய மகன் யோசுவா.
28 பெத்தேலையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் அவர்களுடைய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளடக்கியிருந்தன. கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் கிராமங்களும், ஆயாவும் அதன் கிராமங்களும் வழிநெடுகிலுமுள்ள சீகேமும் அதன் கிராமங்களுமாக இருந்தன. அவை அவர்களுடைய நிலமும் குடியிருப்புமாயிருந்தன.
29 அதோடு மனாசேயின் எல்லையிலிருந்து பெத்ஷான் முழுவதும் தானாகு, மெகிதோ, தோர் ஆகிய இடங்களும், அவற்றுடன் அவற்றின் கிராமங்களும் அவர்களின் குடியிருப்பாயிருந்தன. இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் சந்ததிகள் இந்தப் பட்டணங்களில் வாழ்ந்துவந்தார்கள்.
ஆசேர்
30 ஆசேரின் மகன்கள்:
இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
31 பெரீயாவின் மகன்கள்:
ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன்.
32 ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
33 யப்லேத்தின் மகன்கள்:
பாசாக், பிம்கால், அஸ்வாத்.
இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
34 சோமேரின் மகன்கள்:
அகி, ரோகா, எகூபா, ஆராம்.
35 அவனுடைய சகோதரன் ஏலேமின் மகன்கள்:
சோபாக், இம்னா, சேலேஸ், ஆமல்.
36 சோபாக்கின் மகன்கள்:
சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா.
38 யெத்தேரின் மகன்கள்:
எப்புனே, பிஸ்பா, ஆரா.
39 உல்லாவின் மகன்கள்:
ஆராக், அன்னியேல், ரித்சியா.
40 ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர்.