௫௨
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல் “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான் என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.
௧ பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
௨ நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
௩ நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
 
௪ நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
௫ எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
அவர் உன்னை உனது வீட்டிலிருந்து*வீடு இது சரீரத்தைக் குறிக்கும். தேவன் ஒருவனை அழிப்பார் என்பதைக் கவிதையில் சொல்லும் வகை இது. இழுத்து எறிவார்.
அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
௬ நல்லோர் இதனைக் காண்பார்கள்.
தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
௭ “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
 
௮ ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
௯ தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

*௫௨:௫: வீடு இது சரீரத்தைக் குறிக்கும். தேவன் ஒருவனை அழிப்பார் என்பதைக் கவிதையில் சொல்லும் வகை இது.