ஓசியா
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் அதிக பகுதிகள் ஓசியாவினால் பேசப்பட்டவைகள். தானே எழுதினானோ, அல்லது மற்றவர்கள் அவன் சொன்ன கர்த்தருடைய வசனங்களை கேட்டு தொகுக்கப்பட்டு, எழுதினார்களோ என்று தெரியவில்லை. இந்த தீர்க்கதரிசியின் பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு” தன்னுடைய வாழ்க்கையோடு தன் செய்திகளை இணைக்கிறான். இந்த பெண் துரோகம் செய்வாள் என்று தெரிந்தும் திருமணம் செய்துக்கொண்டு, மகன்களை பெற்று, அவர்களுக்கு பெயரும் தீர்க்கதரிசன அர்த்தத்துடன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாயத்தீர்ப்பு வரும் என்று வைத்து, செய்தி அளித்து தன் வாழ்க்கையை இணைக்கிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 750 க்கும் 710 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
ஓசியாவின் செய்திகள் சேர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, பிரதிகள் எடுக்கப்பட்டது. இந்த காரியங்கள் எப்பொழுது நடந்தது என்று சரியாக தெரியாவிட்டாலும், எருசலேமின் அழிவுக்குமுன் எழுதப்பட்டது என்று நிச்சயிக்கப்படுகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
விஷேசமாக இந்த புத்தகம் இஸ்ரவேலின் வட இராஜ்ஜியத்திற்கு எழுதப்பட்டது. அவர்கள் சிறைப்பட்டு போனப்பிறகு, இந்த புத்தகம் எச்சரிப்புக்காகவும், மக்கள் மனம்திரும்பி ஆண்டவரிடம் மறுபடியும் திரும்பக் காக்கப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனுக்கு, இஸ்ரவேல் மக்களும், நாமும் உண்மையாயிருக்கவேண்டும் என்று ஓசியா ஞாபகப்படுத்துகிறான். யெகோவா தான் ஒரே மெய்யான தேவன். முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்ற தான் விரும்புகிறார். பாவம் நியயாத்தீர்ப்பின் அழிவைக் கொண்டுவரும். எதிரி சேனையினால் உண்டாகும் அடிமைத்தனத்தின் வேதனைகளை எச்சரித்தான். தேவன் மனிதனைப் போல் வாக்குகளை மீறுகிறவர் அல்ல. இஸ்ரவேலர்கள் பாவம் செய்திருந்தும் தேவன் அவர்களை தொடர்ந்து அன்புகூர்ந்தார், மறுபடியும் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வழி செய்தார். இஸ்ரவேலர்கள் விக்கிர ஆராதனை செய்து, பாவத்திற்கும், தண்டனைக்கும் தகுதியாயிருந்தலும், அன்பினிமித்தம் மன்னித்தார், அதற்கு உவமையாக, ஓசியாவை கோமர் என்ற சோரம்போகும் பெண்ணை திருமணம் செய்து காட்டினான்.
மையக் கருத்து
சோரம்போகுதல்
பொருளடக்கம்
1 ஓசியாவின் உண்மையில்லாத மனைவி. — 1:1-11
2 இஸ்ரவேலின் மீது வரும் நியாயத்தீர்ப்பும், தண்டனைகளும். — 2:1-23
3 தேவன் தமது மக்களை மீட்டார். — 3:1-5
4 இஸ்ரவேல் சோரம்போனதால் ஏற்பட்ட தண்டனை — 4:1-10:15
5 இஸ்ரவேலின் மீது, தேவனின் அன்பு. — 11:1-14:9
அத்தியாயம் 1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் மகனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் மகனாகிய ஓசியாவிற்கு கிடைத்த யெகோவாவுடைய வசனம்.
ஓசியாவின் மனைவியும் பிள்ளைகளும்
யெகோவா ஓசியாவைக்கொண்டு சொல்லத் தொடங்கினபோது, யெகோவா ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு விபச்சாரியையும் அவளுடைய பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் யெகோவாவைவிட்டு விலகி கெட்டுப்போனது என்றார். அவன் போய், திப்லாயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பமடைந்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல்*இந்த எஸ்ரயேல்-அர்த்தம்-தேவன் விதைப்பார்/ சிதறடிப்பார்/, இது ஒரு பட்டணம், இங்கே இஸ்ரவேலின் ராஜா குடும்பத்தாரையெல்லாம் யெகூ கொன்றுப் போட்டான். பிறகு ராஜாவானான். 2. ராஜா 9-10. அதிகாரங்கள்-பார்க்கவும் என்னும் பெயரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் யெகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவேன். அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கம் செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், போரினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரர்களினாலும் நான் அவர்களை காப்பாற்றாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை காப்பாற்றுவேன் என்றார். அவள் லோருகாமாவைஇரக்கம் பெறாதவள் பால்மறக்கச்செய்தபிறகு, கர்ப்பமடைந்து ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீஎன் ஜனமல்ல என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை. 10 என்றாலும், இஸ்ரவேல் மக்களின் தொகையை அளக்கவும் எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் மக்களல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். 11 அப்பொழுது யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் ஒன்றாகக் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு§மறுபடியும் தம் மக்களை நாட்டுவார். வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாக இருக்கும்.

*அத்தியாயம் 1:4 இந்த எஸ்ரயேல்-அர்த்தம்-தேவன் விதைப்பார்/ சிதறடிப்பார்/, இது ஒரு பட்டணம், இங்கே இஸ்ரவேலின் ராஜா குடும்பத்தாரையெல்லாம் யெகூ கொன்றுப் போட்டான். பிறகு ராஜாவானான். 2. ராஜா 9-10. அதிகாரங்கள்-பார்க்கவும்

அத்தியாயம் 1:8 இரக்கம் பெறாதவள்

அத்தியாயம் 1:9 என் ஜனமல்ல

§அத்தியாயம் 1:11 மறுபடியும் தம் மக்களை நாட்டுவார்.