46
பாபிலோனின் தெய்வங்கள்
1 பேல்*பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன். தெய்வம் தலை கவிழ்கிறது;
நேபோ தெய்வம் குப்புற விழுகிறது.
அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன;
ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள்
இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.
2 அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன.
அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி
தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன.
3 “யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே,
நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்;
நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன்,
நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.
4 நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும்,
உங்களைத் தாங்கப்போகிறவர் நானே.
உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன்.
நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன்.
5 “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்?
என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்?
6 சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி,
தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்;
அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்;
பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.
7 அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள்.
அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள்.
அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது.
ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை;
ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.
8 “கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள்.
இதை மனதில் பதித்து வையுங்கள்.
9 முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்;
நானே இறைவன், வேறொருவர் இல்லை;
நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.
10 நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர்,
முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர்.
‘என் நோக்கம் நிலைநிற்கும்;
நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.
11 நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன்.
தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன்.
நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்;
நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.
12 பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே!
எனக்குச் செவிகொடுங்கள்.
13 நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன்,
அது வெகுதூரத்தில் இல்லை;
எனது இரட்சிப்பு தாமதம் அடையாது.
நான் சீயோனுக்கு இரட்சிப்பையும்,
இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.
*46:1 பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன்.